உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / திண்டுக்கல் அணி கலக்கல் * அஷ்வின், ஷிவம் அசத்தல்

திண்டுக்கல் அணி கலக்கல் * அஷ்வின், ஷிவம் அசத்தல்

சேலம்: ஷிவம் சிங், அஷ்வின் கைகொடுக்க, திண்டுக்கல் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி.என்.பி.எல்., தொடரின் 8வது சீசன் நடக்கிறது. சேலத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி, 'பவுலிங்' தேர்வு செய்தது. ஷிவம் அரைசதம்திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங் அதிரடி துவக்கம் தந்தார். 'சீனியர்' அஷ்வின் (5), விமல் குமார் (9) நிலைக்கவில்லை. பாபா இந்திரஜித், 33 ரன் எடுத்தார். அரைசதம் கடந்த ஷிவம் சிங், 78 ரன்னுக்கு (6 பவுண்டரி, 5 சிக்சர்), ஈஸ்வரன் பந்தில் அவுட்டானார். ஈஸ்வரன் பந்துவீச்சில் 'டெயிலெண்டர்'கள் வெளியேறினர். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது. பூபதி குமார் (23) அவுட்டாகாமல் இருந்தார். திருச்சி சார்பில் ஈஸ்வரன் 6 விக்கெட் வீழ்த்தினார்.'சுழல்' ஜாலம்பின் களமிறங்கிய திருச்சி அணிக்கு வசீம் (6), திலீபன் (5), மூர்த்தி (18) ஏமாற்றினர். 'மிடில் ஆர்டரை' அஷ்வின் தகர்த்தார். இவரது 'சுழலில்' ஜமால் (13), ஷ்யாம் சுந்தர் (23) வெளியேறினர். சஞ்சய் யாதவ் 24, ராஜ்குமார் 31 ரன் எடுத்தனர். திருச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 144 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.திண்டுக்கல் சார்பில் அஷ்வின் 3, சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை