உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழகத்துக்கு 2 வெள்ளி கேலோ இந்தியா பளுதுாக்குதலில்...

தமிழகத்துக்கு 2 வெள்ளி கேலோ இந்தியா பளுதுாக்குதலில்...

சென்னை, ஜன. 28-கேலோ இந்தியா விளையாட்டு பளுதுாக்குதலில் தமிழகத்துக்கு 2 வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்தது.கேலோ இந்தியா யூத் விளையாட்டின் 6வது சீசன் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் நடக்கிறது. சென்னை நேரு மைதானத்தில் பளுதுாக்குதல் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் ஒட்டுமொத்தமாக 242 கிலோ துாக்கிய கோவையை சேர்ந்த ஆகாஷ் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மகாராஷ்டிராவின் மகாதேவ் (253 கிலோ) தங்கத்தை தட்டிச் சென்றார்.ஆண்களுக்கான 73 கிலோ பிரிவில் 246 கிலோ பளுதுாக்கிய துாத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆந்திராவின் மகேஷ் (265 கிலோ) தங்கம் வென்றார்.பெண்களுக்கான 55 கிலோ பிரிவில் நாமக்கல்லை சேர்ந்த கனிகாஸ்ரீ (168 கிலோ) வெண்கலம் வென்றார். ஆந்திராவின் சுஸ்மிதா (173 கிலோ) தங்கத்தை தட்டிச் சென்றார்.

நீச்சல்

சென்னையில் உள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நீச்சல் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 100 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' பிரிவில் இலக்கை ஒரு நிமிடம், 16.26 வினாடியில் அடைந்த தமிழகத்தின் ஜாய்ஸ்ரீ வெண்கலம் வென்றார்.

சைக்கிள் பந்தயம்

சென்னை மாமல்லபுரத்தில் நடந்த பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தின் 'ரோடு ரேஸ்' பிரிவில் இலக்கை 2 மணி நேரம், 9 நிமிடம், 05.930 வினாடியில் கடந்த தமிழகத்தின் ஸ்ரீமதி வெண்கலம் கைப்பற்றினார். கேரளாவின் அலனிஸ் லில்லி தங்கம் வென்றார்.

வாலிபால்

சென்னை நேரு மைதானத்தில் நடந்த ஆண்களுக்கான வாலிபால் அரையிறுதியில் தமிழகம், ஆந்திரா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 3-2 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. பைனலில் ஹரியானாவை எதிர்கொள்கிறது.பெண்களுக்கான அரையிறுதியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. தமிழக அணி 1-3 என தோல்வியடைந்தது. இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குஜராத்தை சந்திக்கிறது.

கால்பந்து

சென்னை பல்கலை., மைதானத்தில் நடந்த ஆண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் தமிழகம், மேகாலயா அணிகள் மோதின. இதில் தமிழக அணி 1-2 என தோல்வியடைந்தது. ஏற்கனவே பஞ்சாப், உ.பி.,யிடம் வீழ்ந்த தமிழக அணி காலிறுதி வாய்ப்பை இழந்தது.

யாருக்கு முதலிடம்

கேலோ இந்தியா விளையாட்டில் 26 தங்கம் உட்பட 67 பதக்கம் வென்ற தமிழகம் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.'டாப்-5' அணிகள்

'கோ கோ' ஏமாற்றம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'கோ கோ' விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான லீக் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி 20-25 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பெண்களுக்கான லீக் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் தமிழக அணி 32-21 என தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி