உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா

எசியான்: உலக வில்வித்தை காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ஜோதி, பிரியான்ஷ் ஜோடி முன்னேறியதுதென் கொரியாவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ்-2') நடக்கிறது. காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஜோதி, பிரியான்ஷ் களமிறங்கினர். அரையிறுதியில் இந்திய ஜோடி, வலிமையான, தென் கொரியாவின் ஹான், யங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 158-157 என 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தீபிகா அபாரம்பெண்களுக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, துருக்கியின் எலிப் பெர்ரா கோக்கிரை சந்தித்தார். இதில் தீபிகா குமாரி 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ