உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நழுவியது தங்கம்...நீரஜ் சோப்ரா சபதம்

நழுவியது தங்கம்...நீரஜ் சோப்ரா சபதம்

தோகா: ''இரண்டு செ.மீ., வித்தியாசத்தில் தங்கத்தை தவறவிட்டேன். அடுத்த முறை தங்கம் வெல்வேன்,'' என நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' தடகளம் நடந்தது. இதன் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா களமிறங்கினர். ஒலிம்பிக் (டோக்கியோ, 2021), உலக, ஆசிய சாம்பியன் ஆன நீரஜ் சோப்ரா, கடைசி வாய்ப்பில் 88.36 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் மட்டும் கிடைத்தது.செக் குடியரசின் ஜாகுப் வால்டெச் (88.38 மீ.,) முதலிடம் பெற்று, தங்கம் வசப்படுத்தினார். கிஷோர் ஜெனா (76.71 மீ.,) 9வது இடம் பிடித்து ஏமாற்றினார். இதுகுறித்து நீரஜ் சோப்ரா 26, கூறியது:தோகாவில் 88.00 மீ.,க்கும் அதிகமாக தொடர்ந்து வீச வேண்டும் என முயற்சித்தேன். ஆனால் இது நடக்கவில்லை. முழு அளவில் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. இதற்கு உடல் ஒத்துழைப்பு தராதது ஏன் எனத் தெரியவில்லை.இந்த ஆண்டு வரவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் (ஜூலை 26-ஆக. 11) போட்டி மிக முக்கியமானது. அதேநேரம் டைமண்ட் லீக் போட்டியும் முக்கியம் தான். இம்முறை 2 செ.மீ., வித்தியாசத்தில், இரண்டாவது இடம் பிடித்துள்ளேன். அடுத்த முறை பாரிசில் நடக்க உள்ள டைமண்ட் லீக்கில்( ஜூலை 7) முதலிடம் பெற முயற்சிப்பேன்.ஒலிம்பிக் செல்லும் முன் மூன்று முதல் நான்கு போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். கத்தாரில் இந்திய ரசிகர்கள் கொடுத்த ஆதரவு வியக்கவைக்கிறது. இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை