வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கிரேட் Sir
Super
மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
துபாய்: இந்தியாவின் புதிய கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் ஷ்யாம்நிகில்.துபாயில் போலீஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடந்தது. இதில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பிரனவ் (7.0 புள்ளி) கோப்பை வென்றார். அரவிந்த், பிரனேஷ், ஆதித்யா அடுத்த 3 இடம் பிடித்தனர். மற்றொரு இந்திய வீரர் ஷ்யாம்நிகில், 5.0 புள்ளியுடன் 39 வது இடம் பிடித்தார்.இதையடுத்து இந்தியாவின் 85 வது, தமிழகத்தின் 31வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். முன்னதாக 2011, செப்.,ல் மும்பையில் நடந்த மேயர்ஸ் கோப்பை தொடரில் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார். அடுத்து நடந்த தேசிய பிரிமியர் லீக் தொடரில், தனது 19 வயதில், 2வது அந்தஸ்தை எட்டினார்.2012 மே மாதம் வெளியான 'பிடே' தரவரிசையில் பட்டியலில் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு, குறைந்த பட்சம் அளவான 2500 புள்ளி (2502) பெற்றார். 12 ஆண்டுக்குப் பின் தற்போது துபாய் தொடரில் 3வது அந்தஸ்தா எட்டிய இவர், புதிய கிராண்ட்மாஸ்டர் ஆனார். நாகர்கோவிலை சேர்ந்த ஷ்யாம்நிகில் 31, கூறியது: எட்டு வயதில் செஸ் விளையாடத் துவங்கினேன். பெற்றோர் கற்றுத் தந்தனர். 3 ஆண்டு எந்த தொடரில் பங்கேற்கவில்லை. பின் 13 வயதுக்குட்பட்ட மாநில தொடரில் கோப்பை வென்றேன். 2012க்குப் பின் மூன்றாவது அந்தஸ்து பெற பல ஆண்டுகள் காத்திருந்தேன். 2017ல் ஐரோப்பிய தொடரில் தான் பங்கேற்றேன். சமீபத்தில் பிரான்ஸ் தொடரில் வாய்ப்பு நழுவியது. தற்போது துபாயில் சாதித்தது மகிழ்ச்சி. ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ், மிகைல் டாலை அதிகம் பிடிக்கும். இந்த வெற்றியை எனது பெற்றோருக்கு சமர்பிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
கிரேட் Sir
Super
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025