மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
நிசாவ்: ஒலிம்பிக் 'ரிலே' ஓட்டத்தில் பங்கேற்க இந்திய அணிகள் தகுதி பெற்றன. பஹாமசில் உலக தடகள 'ரிலே' போட்டி (4x400 மீ., ஓட்டம்) நடந்தது. இந்தியா சார்பில் ஆண்கள், பெண்கள், கலப்பு அணிகள் போட்டிக்காக 15 பேர் கொண்ட அணி களமிறங்கியது. பாரிஸ் ஒலிம்பிக் (ஜூலை 26-ஆக. 11) தகுதி போட்டியான இதன் முதல் நாளில் இந்திய அணிகள் ஏமாற்றின. நேற்று இரண்டாவது கட்ட தகுதிச்சுற்று போட்டி நடந்தன. இதன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறலாம். பெண்களுக்கான ஓட்டத்தில் முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரூபல் சவுத்ரி, ஜோதிகா ஸ்ரீ, பூவம்மா, சுபா இடம் பெற்ற கூட்டணி பங்கேற்றது. முதல் 400 மீ., ஓட்டத்தில் ஐந்தாவது இடத்தில் வந்த இந்திய அணி, அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட, 3 நிமிடம், 29.35 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்தது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆண்கள் அபாரம்ஆண்கள் அணிகளுக்கான தகுதிச்சுற்று 2ல் இந்தியாவின் முகமது அனாஸ், முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜிவ், ஆமோஜ் ஜேக்கப் இடம் பெற்ற அணி களமிறங்கியது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, முதலிடத்தில் வந்தது. கடைசி நேரத்தில் அமெரிக்கா (2 நிமிடம், 59.95 வினாடி) முதலிடம் பிடித்தது. இந்திய அணி 3 நிமிடம், 03.23 வினாடி நேரத்தில் ஓடி, இரண்டாவது இடம் பெற்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. தவிர, இந்த சீசனில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடாக இது அமைந்தது.இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் 'டிராக் அண்டு பீல்டு' (தடகளம்) போட்டிகளில் பங்கேற்க இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) உட்பட 19 பேர் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025