உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹம்பியை வீழ்த்தினார் வைஷாலி * நார்வே செஸ் தொடரில்...

ஹம்பியை வீழ்த்தினார் வைஷாலி * நார்வே செஸ் தொடரில்...

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் வைஷாலி வெற்றி பெற்றார்.நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் ஹம்பி-வைஷாலி 'கிளாசிக்கல்' முறையில் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, போட்டியின் 45வது நகர்த்தலில் ஹம்பியை வென்றார். முதல் இரு சுற்று முடிவில் வைஷாலி 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.பிரக்ஞானந்தா ஏமாற்றம்ஆண்களுக்கான இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா, டிங் லிரென் மோதினர். இவரும் மோதிய 'கிளாசிக்கல்' போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'ஆர்மேஜ்டன்' போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 54 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.இரண்டு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா (2.5) நான்காவது இடத்தில் உள்ளார். கார்ல்சன் (3.0), டிங் லிரென் (2.5), அலிரேசா (2.5) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி