உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: இந்தியா 5வது இடம்

ஸ்குவாஷ்: இந்தியா 5வது இடம்

டேலியன்: ஆசிய ஸ்குவாஷ் தொடரில் இந்திய பெண்கள் அணி 5வது இடம் பிடித்தது.சீனாவில், அணிகளுக்கு இடையிலான ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. ராதிகா சுதந்திர சீலன், பூஜா ஆர்த்தி கைகொடுக்க இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 5வது இடத்தை கைப்பற்றியது.ஆண்களுக்கான 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் வேலவன் செந்தில்குமார் மட்டும் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர்களான சுராஜ் குமார் சந்த், ஓம் செம்வால் தோல்வியடைந்தனர். இந்திய அணி 1-2 என தோல்வியடைந்து 6வது இடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை