உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தெற்காசியா டேபிள் டென்னிஸ்: இந்திய அணி சாம்பியன்

தெற்காசியா டேபிள் டென்னிஸ்: இந்திய அணி சாம்பியன்

கண்டி: தெற்காசிய டேபிள் டென்னிசில் இந்திய இளம் அணிகள் கோப்பை வென்றன. இலங்கையின் கண்டியில் தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் 19 வயதுக்குட்பட்டோருக்கான அரையிறுதியில் இந்திய இளம் பெண்கள் அணி 3-0 என நேபாளத்தை வென்றது. பைனலில் இந்தியா, இலங்கை மோதின. முதல் போட்டியில் சயாலி வாணி, 3-0 (11-6, 12-10, 11-8) என பிமாந்தீயை வென்றார். அடுத்து பிரிதா 3-2 (7-11, 11-3, 11-7, 6-11, 11-8) என கவிந்த்யாவை வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் தனீஷா 3-0 என (11-8, 11-7, 11-7) திவ்யா ராணியை சாய்த்தார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வசப்படுத்தியது.15 வயது பிரிவு பைனலில் இந்திய அணி 3-0 என இலங்கையை வென்று சாம்பியன் ஆனது. ஆண்கள் பிரிவு (15 வயது) பைனலில் இந்தியா, இலங்கை மோதின. முதல் இரு போட்டியில் இந்தியாவின் நவிரு, சோஹம் வெற்றி பெற்றனர். அடுத்து சாஹில் தோல்வியடைந்தார். 4வது போட்டியில் சார்தக் வெற்றி பெற, இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !