உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஐ.டி.எப்., டென்னிஸ்: இந்திய ஜோடி அபாரம்

ஐ.டி.எப்., டென்னிஸ்: இந்திய ஜோடி அபாரம்

கோபு: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் அன்கிதா, ருடுஜா ஜோடி முன்னேறியது.ஜப்பானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா. ருடுஜா போசாலே ஜோடி, ஹாங்காங்கின் ஈடைஸ் சோங், பிரிட்டனின் புரூக்ஸ் ஜோடியை சந்தித்தது.முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 7-6 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 6-3 என எளிதாக வசப்படுத்தியது.ஒரு மணி நேரம், 32 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று, ஜப்பானின் ஹயாஷி, இமாமுரா ஜோடியை எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை