உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ருடுஜா ஜோடி சாம்பியன்

ருடுஜா ஜோடி சாம்பியன்

உயுனிங்: சீனாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ருடுஜா போசாலே, நெதர்லாந்தின் பெய்ஜ் மேரி ஜோடி, தைவானின் டிசென் சோ, ஹுசுவான் சோவை சந்தித்தது. முதல் செட்டை ருடுஜா ஜோடி 5-7 என இழந்தது. அடுத்த செட்டை 7-6 என வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்யும் சூப்பர் டை பிரேக்கரில் 12-10 என வென்றது. 2 மணி நேரம், 32 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 5-7, 7-6, 12-10 என போராடி வென்று, சாம்பியன் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை