உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலி பெயரில் வாழ்ந்த வங்கதேச நபர் சிக்கினார்

போலி பெயரில் வாழ்ந்த வங்கதேச நபர் சிக்கினார்

சென்னை:சென்னை விமான நிலைய குடியுரிமை துறை அதிகாரி, சென்னைமத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், 'வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது மிஜனுார் இஸ்லாம், 38. இவர், போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கதேச குடியுரிமையை மறைத்துள்ளார்.மேலும், 'மெஜனுார் ரஹ்மான் அப்துல் காசிம்' என்ற பெயரில்,இந்திய பாஸ்போர்ட் பெற்று வங்கதேசத்திற்கு செல்ல முயற்சி செய்ததாக' குறிப்பிட்டு இருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், முகமது மிஜனுார் இஸ்லாம் என்பவர், கடந்த 2005ல் வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லையை சட்டவிரோதமாக கடந்து, மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்தது தெரிய வந்தது.பின், போலியானபெயரில் ஆதார் கார்டு பெற்று, அதன் அடிப்படையில் இந்திய பாஸ்போர்ட் பெற்று, மீண்டும் வங்கதேசத்திற்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை