திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியினர், ஓட்டுனர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு, புதிய வாகன பதிவு, வாகன தகுதி சான்று பெறுவது ஆகியவற்றுக்காக, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டுவட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, 36 கி.மீ., சென்று சிரமப்பட்டனர்.இதை தவிர்க்க, திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் துவக்க, இப்பகுதியினர் பல ஆண்டுகளாக வலியுறுத்திய நிலையில், கடந்த 2018ல் திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில், அலுவலகம்துவக்கப்பட்டது.அலுவலகத்தை விரைந்து துவக்க கருதி, திருக்கழுக்குன்றம் மைய பகுதியிலிருந்து, 4 கி.மீ.,க்கு அப்பால், தனியாரின் குறுகிய கட்டடத்தில் அலுவலகம்ஏற்படுத்தப்பட்டது.பின், அலுவலகத்திற்காக, 2.5 ஏக்கர் இடம் கேட்டு, வருவாய்த் துறையிடம் வலியுறுத்தப்பட்டது.சில இடங்கள் குறித்து பரிசீலித்தும், ஆறு ஆண்டு களாக இடம் ஒதுக்கப்படாமல் தாமதமாகிறது.குறுகிய இடத்தில், ஊழியர்கள் இட நெருக்கடியில் பணியாற்றுகின்றனர். சேவைகளுக்காக வந்து செல்வோரும், அடிப்படை வசதிகள்இல்லாததால் அவதிப்படுகின்றனர்.அலுவலக பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் கருதி, வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க, வருவாய்த்துறையினர் விரைந்து இடம் ஒதுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்திஉள்ளனர்.