உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில், மாணவர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, நேற்று நடந்தது. இதில், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா, தனியார் மொபைல் பொது மேலாளர் சுபாஷ் சந்திரா ஆகியோர் பங்கேற்று, பொதுத்தேர்வில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.இதைத்தொடர்ந்து, மாணவர் சங்க நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். இதில், பள்ளியின் முதல்வர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி