உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தமிழகத்தில் சிறந்த நகராட்சி; மறைமலை நகருக்கு 2ம் இடம்

தமிழகத்தில் சிறந்த நகராட்சி; மறைமலை நகருக்கு 2ம் இடம்

மறைமலை நகர், : சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த விருது வழங்கும் முன், தமிழகத்தில் உள்ள 134 நகராட்சிகளில், சுகாதாரம், வருவாய், பொறியியல், நகரப்புனரமைப்பு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் சிறந்து விளங்கும், மூன்று நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டிற்கான சிறந்த நகராட்சியாக, திருவாரூர் முதலிடத்தையும், மறைமலை நகர் இரண்டாம் இடத்தையும், ராணிப்பேட்டை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, விருது மற்றும் பரிசுத் தொகைக்கான வரைவோலையை, மறைமலை நகர் தி.மு.க., நகர சபை தலைவர் சண்முகத்திடம் வழங்கினார்.இந்த நிகழ்வில், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் மற்றும் மறைமலை நகர் நகராட்சி கமிஷனர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை