| ADDED : ஆக 09, 2024 10:40 PM
கூவத்துார்:கூவத்துார் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜீவித், 18. தனியார் கல்லுாரியில், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று, தனது தம்பி ரஞ்சித், 12, என்பவரை, கூவத்துாரில் இருந்து 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.நெற்குணப்பட்டு கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, எதிர்திசையில் வந்த நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 31, என்பவரின் 'ஆக்டிவா' இருசக்கர வாகனம், எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில், ஜீவித் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் மற்றும் மோகன்ராஜ் இருவரும் பலத்த காயமடைந்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற கூவத்துார் போலீசார் வழக்கு பதிந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின், உயிரிழந்த ஜீவித் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.