உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிரைவர் தாக்குதல் விவகாரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது

டிரைவர் தாக்குதல் விவகாரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது

செங்கல்பட்டு : சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 38. இவர், நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்துடன், 'டாடா' சரக்கு வாகனத்தில் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்துவது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், சுங்கச்சாவடி ஊழியர்கள் முருகனை சரமாரியாக தாக்கினர். ஆத்திரமடைந்த முருகன் குடும்பத்தினர், சுங்கச்சாவடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களுக்கு ஆதரவாக மற்ற வாகன ஓட்டிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மற்ற வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்களான குமார், 36, முத்து, 38, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை