உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முழு கொள்ளளவை எட்டிய ஏரி; உபரிநீரால் விவசாயிகள் மகிழ்ச்சி

முழு கொள்ளளவை எட்டிய ஏரி; உபரிநீரால் விவசாயிகள் மகிழ்ச்சி

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே தொழுப்பேடு -- ஒரத்தி மாநில நெடுஞ்சாலையோரம், கடமலைப்புத்துார் ஏரி அமைந்துள்ளது. அச்சிறுபாக்கம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி, 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த ஏரியிலிருந்து, மதகு வழியாக பாசன நீர் கொண்டு சென்று, 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, ஏரியின் நீர்வரத்து கால்வாய்களில் இருந்து அதிகப்படியான நீர் வருவதால், ஏரி நேற்று முழு கொள்ளளவை எட்டியது.இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கலங்கல் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கோடை காலத்தில், கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறுவதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியினர் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை