மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
5 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
5 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
5 hour(s) ago
மாமல்லபுரம் : சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, தடம் எண்: 588 என்ற பேருந்தை இயக்கி வருகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு, தடம் எண்: 515 என்ற பேருந்தை இயக்குகிறது. இப்பேருந்து, திருப்போரூர், கேளம்பாக்கம், வண்டலுார் வழியாக இயக்கப்படுகிறது.இந்நிலையில், தடம் எண்: 515 பேருந்துகள், நிர்வாகத்திற்கு அதிக வருவாய் அளித்து வருவதால், போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகள் அளிக்கப்படும்போது, இத்தடத்தில் புதிய பேருந்து இயக்கப்படும். தற்போதும், தாழ்தள பேருந்துகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தட போக்குவரத்திற்காக, முதல்கட்டமாக, மூன்று பேருந்துகள் வழங்கப்பட்டு இயக்கப்படுகின்றன.மேலும், திருவான்மியூர் - மாமல்லபுரம் தடத்திலும், தாழ்தள பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago