உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதல்வர் வந்ததால் பாதி துாரம் பேட்ச் ஒர்க் : சாலை பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்

முதல்வர் வந்ததால் பாதி துாரம் பேட்ச் ஒர்க் : சாலை பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலை 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, திருக்கச்சூர், ஆப்பூர், தெள்ளிமேடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், தினமும் சென்று வருகின்றன.இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில் - வடக்குப்பட்டு கூட்டு சாலை வரை, 10 கி.மீ., துாரம் செங்கல்பட்டு மாவட்டத்திலும், மீதம் உள்ள 15 கி.மீ., காஞ்சிபுரம் மாவட்ட எல்லையிலும் உள்ளது. இந்த சாலையை, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.இந்த சாலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது. சர்வீஸ் சாலையில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இந்நிலையில், கடந்த 17ம் தேதி, தமிழக முதல்வர் காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் பகுதியில் சிப்காட் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை திறந்து வைக்க, இந்த சாலையில் வந்தார்.இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் - வல்லம் வரை, 9 கி.மீ., தொலைவுக்கு சாலையில் இருந்த பள்ளங்களை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தார் ஊற்றி சரி செய்தனர். மீதம் உள்ள பகுதிகளில் பள்ளங்கள் சரி செய்யாததால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் - வடக்குப்பட்டு கூட்டு சாலை வரை, சாலையில் உள்ள பள்ளத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் இருவர் உயிரிழந்தனர்.பலர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு, கை, கால்களில் முறிவு ஏற்படுவதோடு, பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த சாலையில், வல்லம் பகுதியில் உள்ள பள்ளங்களை கடந்த வாரம் தார் ஊற்றி, மராமத்து பணி மேற்கொண்டனர். முழு சாலையும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழி வரை மட்டுமே சீரமைத்தது ஏமாற்றமாக உள்ளது.எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை