உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க வேண்டுகோள்

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க வேண்டுகோள்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.தென் மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் வாடகை வீட்டில் தங்கி, ஒரகடம், மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில், பணிபுரிந்து வருகின்றனர்.பத்து ஆண்டுகளுக்கு முன், திருக்கச்சூருக்கு செங்கல்பட்டில் இருந்து சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர், மறைமலை நகர் வழியாக, தாம்பரம் வரை டி60 அரசு பேருந்து மற்றும் மூன்று மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.பல்வேறு காரணங்களால், இந்த பேருந்துகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில், இந்த தடத்தில் உள்ள பனங்கொட்டூர், பேரமனுார், சட்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில், குடியிருப்புகள் அதிக அளவில் ஏற்பட்டன.இங்கு உள்ளவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு, 5 கி.மீ., தொலைவில் உள்ள மறைமலை நகருக்கு சென்று வருகின்றனர்.எனவே, நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம், செங்கல்பட்டில் இருந்து திருக்கச்சூர் வழியாக, தாம்பரத்திற்கு தடம் எண் 82டி புதிய பேருந்து, காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டது.இந்த பேருந்து சேவையை, செங்கல்பட்டு தி.மு.க., - எம். எல்.ஏ., வரலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்து, வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவ -- மாணவியருக்கு வசதியாக இருந்தது. இந்நிலையில், இந்த பேருந்து மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது:புதிய பேருந்து இயக்கப்பட்டது, பலருக்கும் உதவியாக இருந்தது. தற்போது பேருந்து மீண்டும் நிறுத்தப்பட்டதால், வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி குழந்தைகள் முன்பின் தெரியாதவர்களிடம் லிப்ட் கேட்டு செல்லும் நிலை உள்ளது.எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது, இந்த பேருந்துகள் இயக்கப்பட்டால் வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை