உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்: ஒருவர் கைது

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்: ஒருவர் கைது

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட கிளியாற்றில், மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று, அதிகாலை மேல்மருவத்துார் அருகே தண்டலம் பகுதியில், மதுராந்தகம் ஏரிக்கு நீர் செல்லும் கிளியாற்று பகுதியில், மாட்டுவண்டியில் மணல் கடத்துவதாக, மேல்மருவத்துார் போலீசருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற மேல்மருவத்துார் போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட தண்டலம் கிராமம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர், 60, என்பவரை கைது செய்து, மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை