உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக்கிலிருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

பைக்கிலிருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

மதுராந்தகம்:படாளம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத், 24. இவர், நேற்று முன்தினம் இரவு, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், மெய்யூர் அருகே சென்றபோது, தனியார் வீட்டு மனை வளைவில், கோபிநாத் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.இதில், தலையில் பலத்த காயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து, படாளம் போலீசாருக்கு, அப்பகுதிவாசிகள் தகவல் அளித்தனர்.அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கோபிநாத்தின் உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை