உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மீனவர் பகுதி மயானம் செல்ல கால்வாயில் பாலமின்றி அவதி

மீனவர் பகுதி மயானம் செல்ல கால்வாயில் பாலமின்றி அவதி

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம் குப்பம், வாயலுார் உய்யாலிகுப்பம் ஆகிய மீனவ பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள், பகிங்ஹாம் கால்வாய்க்கு கிழக்கில் உள்ளன. இப்பகுதிகளுக்கான மயானங்கள், கால்வாய்க்கு மேற்கில் உள்ளன.இறந்தவர் உடலை புதைக்க, எரிக்க, கால்வாயின் குறுக்கில் கடந்தே செல்ல வேண்டும். புதுப்பட்டினம் மயானம் செல்ல, கல்பாக்கம் பாவினி நிறுவனம், பல ஆண்டுகளுக்கு முன், கால்வாயில் இரும்பு நடைபாலம் அமைத்தது. நாளடைவில் துருப்பிடித்து சீரழிந்தது. அதன் அபாயம் கருதி பயன்படுத்தவும் இல்லை.உய்யாலிகுப்பம் மயானத்திற்கு, தற்போது பாதையில்லை. இரண்டு பகுதியினரும், கால்வாயை துார்த்தே நடைபாதையாக பயன்படுத்துகின்றனர்.மழைக்கால வெள்ளப்பெருக்கின் போது, இறந்தவர் உடலை கால்வாயை கடந்து கொண்டு செல்ல இயலாமல், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, இப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு வசதியாக, இப்பகுதியில் பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை