உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவடிசூலம் ஞானபுரீஸ்வரருக்கு திருக்கல்யாணம்

திருவடிசூலம் ஞானபுரீஸ்வரருக்கு திருக்கல்யாணம்

செங்கல்பட்டு : சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருவடிசூலம் கிராமத்தில், கோவர்த்தனாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வர் கோவில் உள்ளது.நேற்று, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று மூலவர் மற்றும் உற்சவருக்கு காலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.மாலை கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள வினாயகர் சன்னிதியில் இருந்து சீர்வரிசை தட்டுக்களுடன் பெண் அழைப்பு நடைபெற்றது.தொடர்ந்து, மணப்பந்தலில் கோவர்தனாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. யாகம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசை மற்றும் வாண வேடிக்கையுடன் திருக்கல்யாணம் நடத்தப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை