உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொபைலில் ஆபாச வீடியோ போக்சோவில் இருவர் கைது

மொபைலில் ஆபாச வீடியோ போக்சோவில் இருவர் கைது

சென்னை:மொபைல் போனில் பள்ளி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.சென்னை, கொத்தவால்சாவடியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, ஆன்லைன் வகுப்பிற்காக மொபைல்போன் பயன்படுத்தினார். அந்த மொபைல்போன் எண்ணிற்கு, கடந்த மாதம் அறிமுகம் இல்லாத மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளனர்.மாணவியின் தந்தை அளித்த புகாரின்படி அனைத்து மகளிர் போலீசார், கொத்தவால்சாவடியை சேர்ந்த ரவி, 19, கிரண்சிங், 23, ஆகிய இருவரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை