உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உவர்ப்பாக மாறும் தண்ணீர்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உவர்ப்பாக மாறும் தண்ணீர்

செய்யூர் : சூணாம்பேடு அடுத்த கொளத்துார் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் அருகே கழிவெளி அமைந்துள்ளது.இதனால், குடியிருப்பு பகுதி நிலத்தடி நீர்மட்டம் உப்புநீரால் பாதிக்கப்படுவதை தடுக்க, பல ஆண்டுகளாக கழிவெளி பகுதிக்கும், கிராமத்திற்கும் இடையே கால்வாய்கள், குளங்கள் மற்றும் குட்டைகள் அமைக்கப்பட்டு, அதில் மழைநீர் சேமிக்கப்பட்டு வந்தது.நாளடைவில் தனிநபர்கள் கால்வாய்கள் மற்றும் குட்டைகளை ஆக்கிரமிப்பு செய்து முறைகேடாக பட்டா மாற்றி வருவதால், குடியிருப்பு பகுதி நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து முறைகேடாக பட்டா மாற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை