| ADDED : ஆக 20, 2024 10:19 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த சூணாம்பேடு காலனி பகுதியில், கள்ளத்தனமாக பதுக்கிவைத்து மதுபாட்டில் விற்பனை நடப்பதாக, மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, வருவாய்த் துறையினருடன் இணைந்து, மது விலக்கு அமலாக்கத்துறை போலீசார், சூணாம்பேடு காலனி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.அதில், முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலர், 56, என்பவர், தன் மளிகைக் கடையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.அதையடுத்து, மலர் என்பவரை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். பின், அந்த மளிகை கடைக்கு, செய்யூர் வட்டாட்சியர் சரவணன் சீல்' வைத்தார்.