உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று மின்சார ரயில் சேவை ரத்து 150 கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு

இன்று மின்சார ரயில் சேவை ரத்து 150 கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு

சென்னை:''மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடங்களில் இன்று கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்,'' என, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டத்தில், கோடம்பாக்கம் - தாம்பரம் வழித்தடத்தில் ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:05 மணி முதல் மாலை 3:15 மணி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பயணியரின் வசதிக்காக மேற்கண்ட வழித்தடங்களை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகளை இயக்க வேண்டுமென சென்னை கோட்டம், மாநகர போக்குவரத்து கழகத்தை தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டது. இதற்கிடையே, ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகின்றன. எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை கூடுதலாக இந்த பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய நிலையங்களில் அதிகாரிகள் நியமித்து, பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ