உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிலதிபர் வீட்டில் 90 சவரன் திருட்டு

தொழிலதிபர் வீட்டில் 90 சவரன் திருட்டு

சென்னை:சென்னை தி.நகர், சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார், 32; தொழிலதிபர்.கடந்த வாரம், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, பங்கஜ்குமாரின் மனைவி நகை அணிய பீரோவை திறந்து பார்த்தார். அதில் செயின், கம்மல், வளையல், நெக்லஸ் என, 90 சவரன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நேற்று முன்தினம் பங்கஜ்குமார், பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார், வீட்டில் வேலை பார்த்த விஜயலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது, நகையை திருடியதை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார்.விஜயலட்சுமி, அவரின் கணவர் விக்னேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை