உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காரில் பைக் மோதி வாலிபர் பலி

காரில் பைக் மோதி வாலிபர் பலி

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், 45. பிளம்பர். நேற்று முன்தினம் மாலை 6:50 மணிக்கு, சென்னையிலிருந்து சூலேரிக்காட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார்.புதிய கல்பாக்கம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்ற கார் மீது மோதி காயமடைந்தார்.அப்பகுதியினர், காயமடைந்த அய்யப்பனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அய்யப்பனின் சகோதரர் சீதாராமன், மாமல்லபுரம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி