மேலும் செய்திகள்
திருப்போரூர் ஒன்றியத்தில் 12 ஏரிகள் நிரம்பின
26-Oct-2025
சாலையில் திரியும் மாடுகளால் தினமும் தொல்லை
26-Oct-2025
வேகத்தடுப்பில் இரும்பு தகடுவாகனங்களை மறைப்பதால் ஆபத்துதிருப்போரூர் அடுத்த இ.சி.ஆர்., சாலை முட்டுக்காடு படகு குழாம் திரும்பும் இடத்தில், வேகத்தடுப்பிற்கான இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்பு தடுப்பின் மத்தியில், இரும்பு தகடு அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் படகு குழாமிற்கு செல்ல சாலையை கடக்கும்போது, எதிரே வரும் வாகனங்களை இரும்பு தகடு மறைக்கிறது.அப்போது, தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால், அங்கு விபத்து ஏற்படும் சூழலும் உருவாகிறது. எனவே, விபத்தை தவிர்க்க, இரும்பு தகடை அகற்றி மாற்று தடுப்பு அமைக்க வேண்டும்.- எம்.விஜயகுமார், முட்டுக்காடு.நீலமங்கலத்தில் சாலை சேதம்அபாயத்தில் வாகன ஓட்டிகள்பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் கிராமத்தில், திருக்கழுகுன்றம் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலை நடுவே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வ.காசிநாதன், பவுஞ்சூர்.
26-Oct-2025
26-Oct-2025