| ADDED : ஜன 23, 2024 05:37 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, சப் -- கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், சாலை, குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா மாற்றம், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 256 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் மனு மீது விசாரணை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க, சமூக நலத்துறை மற்றும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பின், அந்த பெண்ணிடம் விசாரித்த சமூக நலத்துறை அதிகாரிகள், வரும் 24ம் தேதி அலுவலகம் வர வேண்டும் என தெரிவித்தனர்.