உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேவனுார் சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

தேவனுார் சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

செய்யூர்:செய்யூர் அருகே நல்லுார் கூட்டுச்சாலையில் இருந்து, தேவனுார் கிராமத்திற்கு செல்லும் தார்ச் சாலை உள்ளது. இதுவே கிராம மக்களின் பிரதான சாலை.தினசரி, நுாற்றுக்கணக்கான மக்கள் இச்சாலையில் சென்றுவருகின்றனர். இந்த சாலை ஓரத்தில், வயல்வெளி நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் கிணறு உள்ளது.சாலையோரம் உள்ள கிணற்றில், எந்தவித தடுப்பும் அமைக்கப்படாததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியதாவது:கிணறு உள்ள பகுதியில், சிறிய எச்சரிக்கை பலகை மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.இரவு நேரத்தில், புதிதாக சாலையில் வரும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள கிணற்றில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி