உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுபான்மையினர் நலத்திட்டம் வரும் 7ல் கருத்துகேட்பு

சிறுபான்மையினர் நலத்திட்டம் வரும் 7ல் கருத்துகேட்பு

செங்கல்பட்டு:சிறுபான்மையினருக்கு, அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டம், வரும் 7ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி குறிப்பு: சிறுபான்மையினருக்கென, தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியும் கூட்டம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வரும் 7ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று குறைகள், நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ