உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்க மனு

உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்க மனு

ஊரப்பாக்கம்:வண்டலுார் அடுத்த, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தலைமை செயலர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்து, ஊரப்பாக்கம் நியாயவிலை கடையில், பொங்கல் தொகுப்பு வழங்கினார். அப்போது, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் கார்த்திக், அவரிடம் மனு அளித்தார்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், பல ஆண்டுகளாக நியாயவிலை கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் பராமரிப்பு இல்லாமலும், புதிய கட்டடம் கட்ட முடியாத நிலையிலும் உள்ளது. இதை பாரமரிக்கவும், புதிய கட்டடங்கள் கட்டவும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உறுதி அளித்தார். இதுதொடர்பாக, அறிக்கை அளிக்க, கலெக்டர் ராகுல்நாத்துக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ