உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம்

சிங்கபெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலில், நேற்று ரத சப்தமி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. காலை 6:30 மணிக்கு உற்சவர் பிரகலாத வரதர் சூரிய பிரபை வாகனத்திலும், 8:00 மணிக்கு கருட வாகனத்திலும், அதன்பின், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி, மங்கல வாத்தியம் முழங்க நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். இதில், சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்