உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தாம்பரம் வழக்கறிஞர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

 தாம்பரம் வழக்கறிஞர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

தாம்பரம்: தாம்பரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு , தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் சானடோரியத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு, இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இரண்டு ஆண்டுகள் பதவி முடிந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. தேர்தல் முடிந்து, அன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், சங்க தலைவராக, ஏற்கனவே தலைவராக இருந்த ஸ்ரீராமன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், செயலராக அர்ஜுணன், பொருளாளராக பத்மநாபன், துணை தலைவர்களாக ஸ்ரீதர், அசோகன் மற்றும் பாக்கியலட்சுமி, இணை செயலராக சீனிவாசகுமார், நுாலகராக ராமதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி