உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசிடம் நாகூசும் ஆபாச பேச்சு பெண் குரலில் பேசிய நபர் சிக்கினார்

போலீசிடம் நாகூசும் ஆபாச பேச்சு பெண் குரலில் பேசிய நபர் சிக்கினார்

சென்னை: புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வரும் பெண் காவலர், சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில், ஏப்., 4ம் தேதி பணியில் இருந்தபோது, அலுவலக எழுத்தர் போன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெண் காவல் அதிகாரிக்கு பி.எஸ்.ஓ., எனும் பாதுகாப்பு பணிக்கு செல்ல விருப்பம் உள்ளதா எனக் கேட்டுள்ளார்.இதற்கு விருப்பம் உள்ளது எனக் கூறினேன். உடனே, அவர் தன்னிடம் பெண் அதிகாரி தொடர்பு கொள்வார் எனக் கூறினார்.அப்போது, என் மொபைல் போன் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்திருந்தது.அழைத்தது பெண் அதிகாரி என நினைத்து, அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினேன். பேசியவர் தன் பெயர் முகவரி மற்றும் இதர விபரங்களை கேட்டுக் கொண்டு, உடல் அங்கங்களைப் பற்றி ஆபாசமாக விமர்சித்தார்.மேலும், 'இரவு ஆண் நபரை வீட்டிற்கு அனுப்புகிறேன்; அவருடன் தவறாக நடந்து கொள்ள வேண்டும்; அப்படியானால், எஸ்.ஐ., பணி கிடைக்க உதவுவதாகவும், புது வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தையில் பேசினார்.மேலும் என் தந்தை தினக்கூலிக்கு செல்கிறாரா எனக் கேட்டார். அப்போது நான், ஆர்.பி.எப்., போலீசில் பணிபுரிவதாக கூறியவுடன் இணைப்பை துண்டித்தார்.இது குறித்து பணிப்பொறுப்பு தலைமைக் காவலரிடம் தெரிவித்தேன். அதற்கு தலைமைக் காவலர் பெண் அதிகாரி இதுபோன்று பேச வாய்ப்பில்லை என்றும், யாரோ போலியாக பேசியிருப்பதாகக் கூறினார்.எனவே, தன்னிடம் பெண் அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்து ஆபாசமாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். இதில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெரியசாமி, 33, என்பவர் பெண் அதிகாரி போன்று குரல் மாற்றி, பெண் காவலரிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது.பெரியசாமி இதேபோன்று, பல பெண் காவலர்களின் மொபைல் போன் எண்களை எடுத்து தொடர்பு கொண்டு இது போன்று பேசியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, பெரியசாமி மீது, திருப்பூர், தர்மபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை