உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி

அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி

சென்னை, கொட்டிவாக்கத்தில், நண்பர்களுடன் கடலில் குளித்த, 16 வயது மாணவன் அலையில் சிக்கி பலியானான். சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்தவன் செந்தில்குமரன், 16. கொட்டிவாக்கத்தில் உள்ள, தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தான்.கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள, கடற்கரைக்கு சென்று, அங்கு நண்பர்களுடன் நேற்று கடலில் குளித்துள்ளான். அப்போது அலையில் சிக்கி உயிருக்கு போராடி உள்ளான்.கடற்கரை ஓரமாக இருந்த மீனவர்கள், மாணவனை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், மாணவன் உயிரிழந்தது தெரிந்தது. சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்