உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆன்லைன் டிரேடிங் அதிக வட்டி ஆசைகாட்டி டாக்டரிடம் ரூ.1.19 கோடி சுருட்டியோர் கைது

ஆன்லைன் டிரேடிங் அதிக வட்டி ஆசைகாட்டி டாக்டரிடம் ரூ.1.19 கோடி சுருட்டியோர் கைது

சென்னை, சென்னை போரூர் அடுத்த வானகரத்தைச் சேர்ந்த பல் மருத்துவர், சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:சமூக வலைதளமான 'எக்ஸ்' தள பக்கத்தில், 'ஆன்லைன்' முதலீட்டு வர்த்தக விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என, ஆசைவார்த்தை கூறினர்.பின், 'வாட்ஸாப்' குழு ஒன்றில் இணைத்தனர். அதைத்தொடர்ந்து, 'ஆன்லைன்' முதலீடு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்வதற்கான 'லிங்க்' அனுப்பினர்.'வாட்ஸாப்' குழுவில் இருந்த பிற நபர்களின் மெசேஜ்கள், செயலி மீது உறுதித்தன்மையை ஏற்படுத்தியது. இதை உண்மை என நம்பி, பல கட்டமாக 1.19 கோடி ரூபாய் வரை செலுத்தினேன்.துவக்கத்தில் சிறிது லாபம் தருவது போன்று, வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினர். அதைத்தொடர்ந்து, செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் செயலியில் காண்பிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை.அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், உதவி கமிஷனர் பால் ஸ்டீபன் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.தீவிர விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த சதீஷ்குமார், 35, சதீஷ், 26, ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்த போலீசார், 23.80 லட்சம் ரூபாய், 2 தங்க செயின், குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய, நான்கு மொபைல் போன், மடிக்கணினி, காசோலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள், வேறு யாரிடமாவது இதேபோல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை