உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவொற்றியூரில் கடலில் மிதந்த பெண் சடலம்

திருவொற்றியூரில் கடலில் மிதந்த பெண் சடலம்

திருவொற்றியூர்:திருவொற்றியூர் குப்பம், சூரை மீன்பிடி துறைமுகம் பகுதியில், பெண் சடலம் ஒன்று மிதந்துக் கொண்டு இருந்தது. திருவொற்றியூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், பைபர் படகில் சென்று, 1 கி.மீ., துாரத்தில் மிதந்து கொண்டிருந்த, 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை, கயிற்றால் கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். அப்பெண்ணின் கையில் சிவகுமார் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுடிதார் அணிந்திருந்த நிலையில், அவர் வயிறு மட்டும் வீங்கி காணப்படுகிறது. கொலையா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி