உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல்போன் திருட்டு சிறுவன் கைது

மொபைல்போன் திருட்டு சிறுவன் கைது

கொடுங்கையூர், சென்னை, கொடுங்கையூர், சேலவாயல், ஜெய்பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 42. இவர் கொடுங்கையூர், ஹர்பர் காலனியில் உள்ள தனது பிளாஸ்டிக் கம்பெனியில் கடந்த 23ம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, தண்ணீர் கேட்டு வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல்போனை பறித்துச் சென்றனர். கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சமீர் பாஷா, 43. இவர் கொடுங்கையூர், செந்தில் நகர் அருகே நின்றிருந்தபோது மர்ம நபர்கள் அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி