உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செயின் பறிப்பு திருடர்கள் கைது

செயின் பறிப்பு திருடர்கள் கைது

பெரம்பூர்:வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ஜானகிதேவி, 23; அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.கடந்த 12ம் தேதி இரவு வேலை முடித்து, பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர், ஜானகி தேவி அணிந்திருந்த 1 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, செம்பியம் காவல் நிலையத்தில் ஜானகிதேவி புகார் அளித்திருந்தார்.'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட பெரவள்ளூரைச் சேர்ந்த குணாளன், 19, மற்றும் பட்டாபிராமைச் சேர்ந்த கிருபைராஜ், 30, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவர் மீதும், ஏற்கனவே ஐந்து வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் பறித்துச் செல்லப்பட்ட ஜானகிதேவியின் தங்க நகையை போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை