உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்கட்டண ரீடிங் எடுக்காமல் அபராதம் மடிப்பாக்கம் பகுதியில் நுகர்வோர் அதிர்ச்சி

மின்கட்டண ரீடிங் எடுக்காமல் அபராதம் மடிப்பாக்கம் பகுதியில் நுகர்வோர் அதிர்ச்சி

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் பெரியார் நகர், சதாசிவம் நகர் மற்றும் ராஜாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த பிப்., மாதத்திற்கான, 'ரீடிங்' எடுக்காத நிலையில், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மின் நுகர்வோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:மடிப்பாக்கம், சதாசிவம் நகர், ராஜாஜி நகர் பகுதியில் கடந்த டிச., மாதம், 'ரீடிங்' எடுக்க வரவில்லை. மின்வாரிய அலுவலகத்தில் கேட்ட போது, மின் அளவை எழுதி எடுத்து வரும் படி கூறினர். அந்த முறையில் பணம் செலுத்தினோம்.அதேபோல, கடந்த பிப்., மாதமும், 'ரீடிங்' எடுக்க பணியாளர்கள் வரவில்லை. நாங்கள் ரீடிங் எடுத்து பணம் செலுத்த சென்றபோது, அதனை ஏற்க மறுத்துவிட்டனர். 'ரீடிங் எடுக்க ஆட்கள் வருவர்' என, கூறினர். ஆனால், யாரும் வரவில்லை. நேரில் முன்பணம் செலுத்தவும் விடவில்லை. 'ஆன்-லைன்' வாயிலாக செலுத்த வேண்டிய தொகை குறித்தும் குறிப்பிடவில்லை. இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தவில்லை என, கடந்த மாதம் இறுதி வாரம் மின் இணைப்பை துண்டிக்க வந்தனர். ஒவ்வொரு இணைப்பிற்கும், 170 ரூபாய் குறைந்த பட்ச அபராதம் விதித்துள்ளனர். மின்வாரியத்தினர். 'ரீடிங்' எடுக்க வராத தற்கு நுகர்வோருக்கு ஏன் அபராதம் விதிக்கப்படுகிறது என கேட்டால், அதற்கான பதில் இல்லை. இதுவரை, 643 பேருக்கு இந்த முறையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மின்னகத்தில் புகார் கொடுத்தோம். அங்கும் கணினியில் பதிவாவதில்லை. நுகர்வோருக்கும் எஸ்.எம்.எஸ். வருவதில்லை. நேரில் தொடர்பு கொண்டு கேட்டால், 'புகார்களை அந்தந்த மின்வாரிய அலுவலகத்திற்கு அனுப்பி விடுவோம். அதன் பிறகு எங்களிடம் புகார் பதிவு இருக்காது' என்கின்றனர்.இந்த பிரச்னை குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் தனிகவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இப்பகுதி மக்கள் மின்வாரியத்தை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.---நமது நிருபர்-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை