உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஞ்சள் நிறத்தில் குடிநீர் பெரியார் நகரில் அதிருப்தி

மஞ்சள் நிறத்தில் குடிநீர் பெரியார் நகரில் அதிருப்தி

கொளத்துார், திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 66வது வார்டில் உள்ள பெரியார் நகரில் பல பகுதிகளில், குடிநீர் மஞ்சள் நிறத்தில் வினியோகிக்கப்படுகிறது.குறிப்பாக, பெரியார் நகர் 12வது பிரதான சாலை, 3வது குறுக்குத் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில், குடிநீர் தரமற்று மஞ்சள் நிறத்தில் வினியோகிக்கப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள், குடிநீர் வாரியத்தில் புகார் தெரிவித்தனர்.கடந்த வாரம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்ற குடிநீர் வாரிய அதிகாரிகள், தண்ணீரை மாதிரி எடுத்து சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.ஆனாலும், இதுநாள் வரை தண்ணீர் மஞ்சள் நிறத்திலேயே வினியோகிக்கப்படுகிறது. பல வீடுகளில் சீரான வேகத்தில் தண்ணீர் 'சப்ளை' செய்யப்படாததால், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.இதுகுறித்து பகுதி மக்கள் கூறுகையில், “பெரியார் நகரில், 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் அப்படியே உள்ளன. சில பகுதிகளில் மட்டுமே குடிநீர் குழாயை மாற்றியுள்ளனர். “பெரும்பாலான பகுதிகளில் மாற்றப்படாததால், குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ