உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு, வீடாக வாக்காளர் ஆய்வு

வீடு, வீடாக வாக்காளர் ஆய்வு

சென்னை, சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 2025ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம், மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கல், ஓட்டுச்சாவடி மையங்கள் பிரித்தல், இடமாற்றம், கட்டட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள், இன்று முதல், அக்., 18ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று குடும்பத்தில் உள்ள வாக்காளர் விபரங்களை சரிபார்க்க உள்ளனர்.எனவே, வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பட்டியல் குளறுபடிஅ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்துள்ளன. பலரால் ஓட்டளிக்க முடியவில்லை. கடந்த தேர்தலில் நீக்கப்பட்டோருடைய பட்டியலை, அதற்கான காரணத்தை சரியாக காரணங்களுடன் வெளியிட வேண்டும். இந்தாண்டும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால், அ.தி.மு.க., சார்பில் நீதிமன்றத்திற்கு செல்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை