உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

அமைந்தகரை, அமைந்தகரையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 33. இவரது நண்பர் தினேஷ், 34. இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஹரிகிருஷ்ணனை வழிமறித்தனர். கத்தியைக் காட்டி மிரட்டி, பணம், நகை கேட்டனர். கொடுக்க மறுத்ததால் தினேஷை கத்தியால் வெட்டி, ஹரிகிருஷ்ணன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகை மற்றும் அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து சென்றனர். காயம் அடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ