உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொழிச்சலுாரில் குப்பை குவியல்

பொழிச்சலுாரில் குப்பை குவியல்

பம்மல், செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியது, பொழிச்சலுார் ஊராட்சி. இங்கு, 15 வார்டுகள் உள்ளன. தினம் 6 டன் குப்பை சேகரமாகின்றன.இவ்வூராட்சியில் குப்பை மேலாண்மை முறையாக ஏற்படுத்தாததால், ஆங்காங்கே காலி மனைகளில் குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன.மனைகளில் தேங்கிஉள்ள தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள், கொசு தொல்லை பன்மடங்கு அதிகரித்துவிட்டன. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் சூழல் அதிகரித்து உள்ளது.ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு, குப்பையை அகற்றி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும் என, பொழிச்சலுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை