மேலும் செய்திகள்
இலக்கிய மன்ற விழா
4 minutes ago
கிரைம் கார்னர்
6 minutes ago
சென்னையின் 15 வயது சிறுமி சிலம்ப போட்டியில் சாதனை
10 minutes ago
நம்ம சென்னை கார்டு அறிமுகம்
11 minutes ago
போரூர்:நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, போரூர் ஏரிக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் செல்லும் குழாய் உடைந்து, போரூர் சந்திப்பில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.சென்னை, நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், போரூர் ஏரியில் விடப்படுகிறது.இந்நிலையில், போரூர் மேம்பாலம் அருகே, நேற்று காலை இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால், போரூர் ஆற்காடு சாலை சந்திப்பில் குளம் போல் தண்ணீர் தேங்கி, பயணியர் பேருந்தில் ஏற முடியாமல் தவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல மணி நேரம் கழித்தே குடிநீர் வாரிய ஊழியர்கள் வந்து, தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர்.இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய பணியால் குழாய் சேதமடைந்துள்ளது. இரவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.
4 minutes ago
6 minutes ago
10 minutes ago
11 minutes ago